சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ‘பிங்க் ஆட்டோ’ சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தகுதியான 250 பெண்களுக்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு தகுதியான பெண்கள் வரும் நவம்பர்-23ம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்களில் அவசர காலங்களில் புகார்களை விரைவாக தெரியப்படுத்த காவல் உதவி […]
தூத்துக்குடி : தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளைத் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதமாகி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, செப்.15-ஆம் தேதி மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே, தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும், […]
திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க மோதிரத்தை வழங்கினார். திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க […]
அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி […]
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கியதற்காக குடியரசு தலைவர் தமிழகத்திற்கு விருது வழங்கியுள்ளார். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில்2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் […]
தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தன்னை தனிமைப் படுத்தி கொண்டார். இதனால், தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.