ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 26-ஆம் சென்னையில் இருந்து டெல்லிசென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்ட – ஒழுங்கு விவகாரம், PFI தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.