போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.