சத்தியமூர்த்தி பவனில் இன்று 'ராட்சத பலூன்' பறக்க விடும் – கே.எஸ்.அழகிரி.

Tamil Nadu Congress Committee Chairman KS Alagiri flies a giant balloon at Sathyamoorthy Bhavan, Chennai at 10.30 am today.

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ராட்சத பலூன் பறக்க விடுகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு,இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்க விடுகிறார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்,”அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு எம்.பி. ரஞ்சன்குமார் அவர்கள் தலைமையில் இன்று (08.12.2021) காலை 10.30 மணியளவில் சென்னை,சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்கவிடுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் விக்டரி எம். மோகன், மாநில செயலாளர்கள் அயன்புரம் கே.சரவணன் மற்றும் திரு டி.விஜயசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.