ஜெயலலிதா நினைவிடத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி

Tamil Nadu Chief Minister Edappadi Palanichamy will inaugurate the Jayalalithaa memorial today in chennai.

ஜெயலலிதா நினைவிடத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ,சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை இன்று  காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்கள்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ,அமைச்சர் பெருமக்கள்,சட்டப்பேரவை துணைத்தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.