2G வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் – ஜெயக்குமார்..!

Fisheries Minister Jayakumar said the Supreme Court would soon give a good verdict in the 2G case. There are cases against DMK.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் 142-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை பாரி முனையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்குக் அமைச்சர்கள் ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், இராஜாஜியின் புகழ் இந்த மண்ணில் என்னென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து ? யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் அந்த விவகாரத்தில் உரிய தீர்ப்பு கிடைக்கும். மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது பண்பாடற்ற செயல், அதிமுகவினர் பக்குவப்பட்ட அரசியல்வாதிகள். மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறு பேசக்கூடது என உச்ச நீதிமன்றமே கூறியிருந்தும் ராசா பேசி வருகிறார்.

2G வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். திமுகவினர் மீது வழக்குகள் உள்ளன. அதிமுகவினர் மீது வழக்கு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனவும் தெரிவித்தார்.