பணமோசடி வழக்கு.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பணமோசடி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பணமோசடி வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பணத்தை பெற்றுக்கொண்டு சிலருக்கு வேலை வாங்கி கொடுத்ததாக கூறி அவர்மீது பணமோசடி வழக்குப்பதிவு எய்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இவர் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து இருந்தது. இதனை தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் பாலாஜி என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்திற்கு தரவேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.