நிவாரண பொருட்களை வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு ! மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி ?

It has been reported that DMK leader Stalin is physically exhausted and has been admitted to a nearby hospital for examination.

நிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வெள்ள நீரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.அந்தவகையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.ஆனால் அப்பொழுது ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.