லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவுறுத்தல்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பண இழப்போடு மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அஇஅதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறியோடு சூதாட்டங்களும் அதிகரித்து போதைப் பொருட்களின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவருகிறது.
பண இழப்போடு மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அஇஅதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறியோடு சூதாட்டங்களும் அதிகரித்து போதைப் பொருட்களின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும்; தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node