சென்னை மாவட்டம் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி விளையாடி பணத்தை இழுந்துள்ளார். கடன் வாங்கி விளையாடி வந்ததால் பணமும் இழந்து கடனாளியாகவும் மாறினார். கடனை கட்டமுடியாது என்ற காரணத்தால் தன்னுடைய 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிசெய்துள்ளார் . பிறகு அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டதால் […]
தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக […]
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக கடனில் சிக்கி கோவையை சேர்ந்த சங்கர் என்கிற மென்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் எனவும், அதற்கு அடிமையாக வேண்டாம் என அரசு அறிவுறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்டத்தால் நடக்கும் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் உயிரை மாய்த்துகொள்வது இன்னும் வேதனை அளிக்கிறது. கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சங்கர், 29வயதான இவர் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டம் […]
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என அண்ணாமலை பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது […]
உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர். உத்திர பிரதேசம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் ரேணு என்கிற பெண் ஆன்லைன் விளையாட்டான லுடோ விளையாடி அதற்கு அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். அவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அதிகமாக பணத்தை இழந்த ரேணு ஒரு கட்டத்தில் எல்லை மீறி தன்னையே பணயமாக வித்து விளையாடியுள்ளார் […]
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில பெண் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் யாரேனும் தற்கொலை செய்து கொண்டால் ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வடமாநில […]
இந்த சட்டத்தால் பல இளைஞர்களின் உயிர்கள் இனி பறிபோகாமல் தடுக்க முடியும் என்பதால் தமிழக அரசை பாராட்டுகிறேன் என விஜயகாந்த் ட்வீட். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமானது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இதற்கு தேமுதிக விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்து தமிழக சட்டசபையில் […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் – காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது… மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என ஜெயக்குமார் ட்வீட். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் […]
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு […]
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு […]
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப மற்றும் வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும், நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறத்து என்று தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வலைத்தளங்கள், இணைய ஊடகங்களிலும் வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று […]
கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது குடும்பத்தையும் சிலர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தபாக்கத்தில் கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகனின் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதால், மனமுடைந்த மனைவி […]
லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவுறுத்தல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பண இழப்போடு மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அஇஅதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறியோடு சூதாட்டங்களும் அதிகரித்து […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும். சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, விரைவில் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து பதிவிட்டுள்ள அவர், சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தாலும் இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் தமிழக அரசு திருத்தப்பட்ட ஆன்லைன் […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என டாக் ராமதாஸ் ட்வீட். கடலூர் அருகே மாணவர் ஒருவர் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் […]
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் – தற்கொலை: தமிழகத்தில் ஏராளமானோர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து, வாழ்கையை தொலைத்து தற்கொலை செய்துள்ளார்கள்.எனவே,ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய எண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.இதன்காரணமாக, சட்டம் இயற்றப்பட்டு அது ரத்து செய்யப்பட்டது, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: இந்நிலையில்,ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி […]
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தகவல். ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதனிடையே, நாடெங்கிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பல குடும்பங்கள் பணத்தையும், உயிரையும் இழந்துள்ளனர். […]
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு, திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கும் உத்தரவாதம் வரவேற்கத்தக்கது என்றும்,ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு,திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் […]