முதலமைச்சர் குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசிய வழக்கு ! விசாரணை ஒத்திவைப்பு

முதலமைச்சர்  பழனிச்சாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் திமுக

முதலமைச்சர்  பழனிச்சாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கொடநாடா, கொலைநாடா என்று பேசினார் . மேலும் முதலமைச்சரை தொடர்புபடுத்தி விமர்சனம் செய்தார்.எனவே மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விசாரணையை நவம்பர்  8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.