ஸ்டாலின் எப்படியாவது தடுத்து நிறுத்த பார்க்கிறார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

Minister SB Velumani has said that no matter how the DMK tries to stop it, we will go ahead with the Pongal gift scheme.

திமுகவினர் எப்படி தடுத்து நிறுத்த நினைத்தாலும் பொங்கல் பரிசு திட்டத்தினை கொண்டு போய் சேர்ப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை ஸ்டாலின் எப்படியாவது தடுத்து நிறுத்த பார்க்கிறார்.திமுகவினர் எப்படி தடுத்து நிறுத்த நினைத்தாலும் மக்களுக்கு பொங்கல் பரிசு திட்டத்தினை கொண்டு போய் சேர்ப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.