ஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின் தான் – ஆ.ராசா பேச்சு..!

DMK Deputy General Secretary A. Razza said that Chief Minister Palanisamy is implementing everything that DMK leader Stalin says.

திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுத்தி வருவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது ஆ.ராசா கூறுகையில், இந்த ஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான் என தெரிவித்தார். சொந்த புத்தியில் இல்லை, ஸ்டாலின் தந்த புத்தியில் வைத்து செய்துள்ளீர்கள். 7.5% இடஒதுக்கீடு கொடுத்தீர்கள், அது யாரு சொன்ன பின்னர் நீங்கள் கொடுத்தீர்கள். ஸ்டாலின் 10 % கேட்ட பின்தான் கொடுத்தீர்கள்.

அதுபோல பொங்கலுக்கு பொங்கல் பரிசு ரூ.5,000 கொடுக்க சொன்னால் தான் ரூ.2,500 கொடுப்பார் என்ற எண்ணத்தில் கோரிக்கை வைத்தோம். மு.க ஸ்டாலின் கோரிக்கைவைப்பதை பார்த்த பிறகுதான் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி என்றால் இந்த ஆட்சி வழிநடத்துவது ஸ்டாலின் தான் என கூறினார்.