"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" – தென்காசி,விருதுநகர் மாவட்டங்களில் பிரச்சாரம்

"Stalin in your constituency" - Campaign in Tenkasi and Virudhunagar districts

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பொதுக்கூட்டம் இன்று தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறுகிறது.

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல்“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டது.அதன்படி  இன்று காலை தென்காசி  மாவட்டத்திலும்,விருதுநகர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.