காவல்துறை உயரதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். தேவையின்றி வருபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரியுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டுள்ளனர்.