பொய் பேசுவதற்கான நோபல் பரிசினை ஸ்டாலினுக்கு வழங்கலாம்- முதலமைச்சர் பழனிசாமி

மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், வேண்டுமென்றே திட்டமிட்டு ,திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் பொய் அறிக்கைகளை வெளியிடுவது,வேண்டுமென்றே அவதூறாக பேசுவது ,இந்த அரசு மீது குறை சொல்வது,அமைச்சர்கள் மீது பழிசுமத்துவது என வாடிக்கையாக கொண்டுள்ளார்.ஆனால் அனைத்தையும் நிராகரித்து அதிமுக வெற்றி பெற வேண்டும். அவர் பேசுவது அத்தனையும் பொய்.இம்மியளவு கூட உண்மை கிடையாது. ஏனென்று சொன்னால், அவர்களுடைய முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது.அதை மறைப்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு நமது அரசு மீதும்,அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்தி ,அவருடைய கட்சி தொண்டர்கள்,முன்னாள் அமைச்சர்கள்,நீதிமன்றத்திற்கு போகும் போது ,அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்திலே திட்டமிட்டு ,அரசியல் நாடகத்தை அரங்கேற்றி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.பொய் பேசுவதற்கு இன்றைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பொய் பேசுவதற்கான நோபல் பரிசினை ஸ்டாலினுக்கு வழங்கலாம்- முதலமைச்சர் பழனிசாமி