வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட் டம் : விவசாயிகள் 6 பேருக்கு ரூ. 50 லட்சம் கேட்டு நோட்டீஸ் ?

Six farmer leaders in Sambhal district have been issued notices, asking them to furnish personal bonds of Rs 50 lakh

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்ற உத்திர பிரதேச விவசாய சங்க தலைவர்கள் தலா ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பல் மாவட்டத்தில் ஆறு விவசாய தலைவர்களுக்கு தலா ரூ .50 லட்சம் தனிநபர் பத்திரங்களை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதில்  பாரதிய கிசான் யூனியன் ( Bharatiya Kisan Union) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சத்யேந்திரா, ரோஹ்தாஸ் மற்றும் வீர் சிங் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இது குறித்து வட்ட அலுவலர்  அருண் குமார் சிங் கூறுகையில்,இந்த தொகையானது எழுத்துப்பிழை ஆகும் .மாஜிஸ்த்ரேட் விடுப்பில் உள்ள நிலையில் பிழையை சரிசெய்து ரூ .50,000 பத்திரமாக மாற்றி அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உத்திரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.