ஆதரவு எம்எல்ஏக்கள் அணிவகுப்பு : சிவசேனா அறிவிப்பு

We are all one and together , watch our 162 together for the first time at grand Hyatt at 7 pm , come and watch yourself @maha_governor

மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆதரவு எம்எல்ஏக்களின் அணிவகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.ஆனால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.எனவே ஆளுநர் இருவருக்கும்  பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.இதன் வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரான  சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

unknown node