முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் வீட்டில் சோதனை நிறைவு..!

The raid, which lasted more than ten hours at the home of SB Velumani brother Anparasan, was completed.

எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது.

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் வீட்டில் சோதனை நிறைவு பெற்றது. எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. இதற்கு முன் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் 7 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.