சசிகலா உறவினர் இளவரசி இன்று விடுதலை

Sasikala's relation Ilavarasi was released today

சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசி இன்று விடுதலையாகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில்  11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி அண்மையில்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று இளவரசி 4 ஆண்டுகள்  சிறை தண்டனை முடிந்து விடுதலையாக உள்ளார்.