சசிகலாவின் உறவினர் இளவரசி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Sasikala's cousin Princess discharged from hospital

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில்  11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.வருகின்ற 5ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் இளவரசி.

|