பெங்களூர் பண்ணை வீட்டிற்கு சென்ற சசிகலா..!

Sasikala discharged from hospital Sasikala has gone to a farm house near Devanahalli in the suburbs of Bangalore.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த  27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனால்,சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா சென்றுள்ளார். பண்ணை வீட்டில் உள்ள சசிகலா ஒரு வாரம் ஓய்வு எடுத்தபின்னர் தமிழகம் திரும்பவுள்ளார்.