#BREAKING: முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

AIADMK ex-minister Saroja's bail hearing adjourned till October 10

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினரான ராசிபுரத்தை சேர்ந்த குணசீலன் என்பவர்  கடந்த 10 ஆண்டுகளாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் குணசீலன் ஒன்றை அளித்தார். அதில் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, காவல்துறை சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் சரோஜா மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.