இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி!

The curfew in Tamil Nadu has been extended till June 21. Accordingly, from today, salon shops and beauty salons will be allowed to operate from 6 am to 5 pm.

தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு மேலும் பல தளர்வுகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை குளிர் சாதன வசதி இல்லாமல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரைஇயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.