130 பேருந்துகள் தயார்...உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க உதவும் ரஷ்யா!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்திருந்தார்.

மேலும்,ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்தார்.

இதனிடையே,உக்ரைன் லிவிவ் நகரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில்,போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ஆபரேஷன் கங்கா  திட்டத்தின் மூலம் மீட்க, மத்திய அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி,உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு,பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில்,உக்ரைனின்கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியுள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்க130பேருந்துகள்தயாராக உள்ளன என்றும்,மேலும், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதிக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் விமானங்கள்மூலம்தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்,ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node