காவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காவிரி கரையோரங்களில்

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம் .

தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர்.

முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது அரசு பயணமே. இது எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று பேசினார்.