தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு , தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பல கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.திமுக மக்கள் கிராம சபை என்று பிரச்சார மேடையை ஆரம்பிக்க .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து அதிமுகவின் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன் ஊழல் ,திராவிடம்,எம்.ஜி.ஆர் என்று தனது பிரச்சார போக்கை சற்று வித்தியாசமாக கொண்டு செல்கிறார் .தனது பிரச்சாரத்தில் ஒரு படி மேலே சென்று ” புரட்சித் தலைவர் திமுகவில் […]
தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.முதலமைச்சரின் அறிவிப்புக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிவிப்பில், தாய்மொழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றிருக்கின்றனர் புதிய கல்விக் கொள்கையானது […]
இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் உள்ள எண்ணூரில் செய்தியர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் என முதல்வரின் அறிவிப்பை மு. க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் வரவேற்பை தெரிவித்துள்ளனர். மேலும், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார். மொழித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மொழி கற்றுக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என கூறினார். […]
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து பல நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம். தொடர்ந்து பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை […]
திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரத்தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார் . திமுக இளைஞரணிச் […]
அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.மழை எச்சரிக்கை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் .கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களிளும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. […]
காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சென்னையில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை.யூகங்கள் மற்றும் கற்பனையின் அடிப்படையில் சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே நமது பகுதி இருக்கிறது.தமிழக மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பருவகாலங்களில் ஏற்படும் பேரிடரின் போது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது .இனி போதிய விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது கவனக்குறைவாலோ ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுவரை 2 கோடி பேருக்கு மேல் இணையதளம் மூலம் சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசு துறைகளின் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் பல்வேறு செயலிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அரசு துறைகளின் பணிகளையும் எளிமையாக்குகிறது .இதுபோல பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இதுவரை 2 கோடி பேருக்கு மேல் தங்களுக்கு தேவையான சான்றுகளை, அரசு அலுவலகங்களுக்கு […]
ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார். இதற்கு அதிமுகவினர்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]
பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . புயல் பாதிக்கும் 4399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளுக்கு தேவையான மின் வசதிகளும் செய்து தரப்படும்.டெல்டா பகுதிகளில் நிரந்தர புயல் பாதிப்பு மையங்கள் உள்ளன.எண்ணெய் நிறுவனங்கள் ஸ்டாக்குகளை […]
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம் . தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர். முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். […]
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது . மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில்,உலகத்திற்கு தமிழனத்தை அடையாளம் காட்டும் விதமாக புறநானுற்றுப்பாடலை மேற்கோள் காட்டியுள்ளார் நிதியமைச்சர் என்று கூறினார்.