ரூ.9800 கோடி மதிப்பில் சரயு கால்வாய் திட்டம் – தொடக்கி வைக்கிறார் பிரதமர்!

Prime Minister Narendra Modi today inaugurated the Rs 9,800 crore Sarayu Canal project in Uttar Pradesh.

உத்தர பிரதேச மாநிலத்தில் ரூ.9800 கோடி மதிப்பில் சரயு கால்வாய் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்க உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பால்ராம்பூருக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். பால்ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இன்று பிரதமரையும் சரயு கால்வாய் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் இந்த திட்டத்தில் அடங்கும் எனக் கூறப்படுகிறது. இன்று 98,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.