#BREAKING: ரூ.50,000 கோடிக்கு சலுகைகள் அறிவித்த ரிசர்வ் வங்கி..!

The Reserve Bank of India has announced incentives of Rs 50,000 crore to improve the medical infrastructure.

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இரண்டாவது அலை முதல் அலைகளை விட ஆபத்தானது என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செய்தியாளர் கூட்டத்தில், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். நல்ல பருவமழை காரணமாக கிராமங்களில் தேவை அதிகரிக்கும் என்று அவர் நம்பினார். கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பொதுமக்கள், வணிகம் தொழில்துறையினர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி கூடுதல் கடன் அளிக்கும். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பத்தாயிரம் கோடி கூடுதல் கடன் அளிக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்தை இருந்ததை விட சுமார் 28 ஆயிரம் பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வெறும் 15 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.