மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Rs 3,000 crore loan scheme for women's self-help groups - Chief Minister Stalin to launch today!

திருவள்ளூர்:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று நடைபெறும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

மேலும்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். தமிழகத்தில் சுமார் ஒரு கோடி மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஏற்கனவே ரூ.10,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.