வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னை மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் வைத்துள்ளது.
இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சிக்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown node