இந்த 4 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக அரசு அரசாணை!எதற்காக தெரியுமா?

Rs 14 crore allocation for these 4 districts - Government of Tamil Nadu Government release! Do you know why?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை உள்ளிட்ட 4 மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.14.0517 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் (TNSDMA) இருந்து ரூ.1.96 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,கொரோனா நோயாளிகளின் பரிசோதனை மற்றும் கொரோனா தொடர்புத் தடயங்களைச் சரிபார்ப்பதற்காக, தற்காலிக ஊழியர்களின் சம்பளத்திற்காக நிதி கோரப்பட்ட நிலையில்,கோவை, சேலம், சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

unknown node
இந்த 4 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக அரசு அரசாணை!எதற்காக தெரியுமா?