தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை,தேனி, திண்டுக்கல்,தென்காசி,திருப்பூர்,விருதுநகர், சேலம்,நாமக்கல்,ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,வருகின்ற 18 ஆம் தேதி தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதே சமயம்,மன்னார் வளைகுடா, அரபிக்கடல்,கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40-60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை உள்ளிட்ட 4 மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.14.0517 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் (TNSDMA) இருந்து ரூ.1.96 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,கொரோனா நோயாளிகளின் பரிசோதனை மற்றும் கொரோனா […]
சென்னை:அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.மேலும்,வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர்,ராமநாதபுரம் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதை அடுத்து பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 12 மாவட்டங்களில் கனமழை: தற்போது, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு: தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ […]