Tag: நிதி ஒதுக்கீடு

உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!

உத்தம தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு  06.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் “கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனம்பெறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி பாசனத் திட்டம் கொண்டுவர முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் மேனாள் சட்டமன்ற […]

- 3 Min Read
Default Image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? – மநீம

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை.  கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 […]

#MNM 6 Min Read
Default Image

“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று […]

central govt 9 Min Read
Default Image

இந்த 4 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு-தமிழக அரசு அரசாணை!எதற்காக தெரியுமா?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக,கோவை உள்ளிட்ட 4 மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ரூ.14.0517 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் (TNSDMA) இருந்து ரூ.1.96 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,கொரோனா நோயாளிகளின் பரிசோதனை மற்றும் கொரோனா […]

#Corona 2 Min Read
Default Image

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படசுருளில் வழங்க வேண்டும் – ஓபிஎஸ் அறிக்கை

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படசுருளில் வழங்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஇஅதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 487 கோடி ரூபாயை திமுக குறைத்து ஒதுக்கியதாலேயே எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]

#OPS 10 Min Read
Default Image

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு…! அரசாணை வெளியீடு…!

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  அவர் தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image