காங்கிரஸ் அலுவலகத்தில் சலசலப்பு எதிரொலி.! நாங்குநேரி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து நீக்கம்.!

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சலசலப்புக்கு காரணம் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் என கூறி அவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த சலசலப்புக்கு காரணம் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் என கூறி அவரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 8 வட்டார தலைவர்களையும் மாற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் காங்கிரஸ் அலுவலகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது இதற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது, நேற்று நடைபெற்ற பிரச்சனைக்கு ரூபி மனோகரன் தான் காரணம் என்பதால் அவரை கட்சியில் இருந்து நீக்க காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.