வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு.. அதிமுக அரசுக்கு ராமதாஸ் கெடு...!

If the AIADMK government does not announce the internal allocation for the Vanni by January 31, it will decide on the alliance, said BJP founder Ramdas.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்து வந்த நிலையில், இன்றுஇட ஒதுக்கீடு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பை பாமக நிறுவனர்ராமதாஸ்மற்றும் அன்புமணிராமதாஸ்ஆகியோர் இணையம் வழியாக பேசினார்.

அப்போது பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக அரசு ஜனவரி 31-க்குள் அறிவிக்கவில்லை எனினும் தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரி 31-க்குள் உள் ஒதுக்கீடு குறித்து பேசு வார்த்தை நடந்த முடியாத நிலை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாமக நிர்வாகக்குழு ஜனவரி 31-ஆம் தேதி கூடும் கூட்டத்தில் பேசுவோம் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம் என தெரிவித்தார். சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடன் வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்துபா.ம.க நிறுவனர் ராமதாஸ்பேசினார். பின்னர், சந்திப்பு குறித்து பேசிய அவர் வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.