தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் – மத்திய குழு!

A report on the rain damage in Tamil Nadu will be submitted to the Central Government soon, the Central Committee said.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த வகையில் வட கிழக்கு பருவ மழை குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் அவர்கள் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தமிழகம் வந்தடைந்தது. ஆய்வு பணிகளை முடித்த மத்திய குழு இன்று புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.