பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ.19,500 கோடி காணொலியில் விடுவித்தார்...!

Prime Minister Modi has released Rs 19,500 crore in the ninth installment under the Kisan scheme.

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை தொகை ரூ.19,500 கோடியை காணொலியில் விடுவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் இதுவரை விவசாய குடும்பங்களுக்கு 1.38 லட்சம் கோடி நிதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதியை பிரதமர் தற்பொழுது காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். 9.75 கோடி  விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ.19,500 கோடி காணொலியில் விடுவித்தார்...!