கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தான் விவசாயம் கற்ற […]
தெலுங்கானா : ஜனகாம – பசரமட்லா கிராமத்தைச் சேர்ந்த நிம்மல நரசிங்கராவ் என்ற விவசாயி தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருடன் இருந்தும் இறந்தது போல் தங்கள் நிலம் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வேதனை தெரிவித்த நிம்மல நரசிங்கராவ் வேகமாக கையில் ஒரு பூச்சி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி குடித்து கொண்டு இருந்தார். கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் […]
தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு, பயிர்களுக்கான காப்பீடு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் காப்பீடு செய்வதற்கான […]
விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி. டெல்லியில் நடைபெற்ற கிசான் சம்மான் சம்மேளன் 2022 மாநாட்டில் பிரதமர் கிசான் நிதியின் 12வது தவணையாக ரூ.16,000 கோடியை சுமார் 12 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுவித்தார். நாடு முழுவதிலும் இருந்து 13,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 1500 வேளாண் தொடக்க நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு […]
போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட […]
குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ1,500 வரை நிதியுதவி என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல், மாநில வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் சேவையின் போக்கு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஸ்மார்ட் போன்களை வாங்க விவசாயிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அரசு […]
எனது எருமை பால் கறக்க மறுக்கிறது என காவல் நிலையத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபுலால் ஜாதவ் எனும் விவசாயி தனது எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .மேலும் தனது எருமை மாட்டிற்கு யாரோ மாந்திரீகம் செய்துள்ளதாகவும், அதனால் தான் அது பால் கறக்க மறுக்கிறது எனவும் தனது கிராமவாசிகள் கூறுவதாவும் அவர் தனது புகாரில் […]
1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய […]
விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறேன். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாங்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, எம்.பி. ஜோதிமணி […]
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, தமிழக அரசின் தனி தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் […]
7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி. கள்ளக்குறிச்சியில் அதிக விளைச்சல் மற்றும் உரிய விலை கிடைக்காததால், விவசாயி ஒருவர் விளைவித்த 7,000 கிலோ வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊரடங்கு காரணமாக விளைவித்த பொருட்களை, வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர். வெளிமாநிலத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய இயலாததால், வண்டிப்பாளையத்தை […]
பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை தொகை ரூ.19,500 கோடியை காணொலியில் விடுவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என வருடத்திற்கு 6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை விவசாய குடும்பங்களுக்கு 1.38 லட்சம் கோடி நிதி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், […]
இன்று பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி விடுவிக்கிறார். பிரதமர் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பிஎம் – கிசான்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை […]
வேளாண்துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளது. சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், கொரோனா தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளை […]
கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டு பால் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அவர் வளர்த்த மாடிகளில் ஒன்று தாய்மை அடைந்த நிலையில், கன்று குட்டியை ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. கன்றுக்குட்டி நான்கு கண்கள், இரண்டு வாய் […]
கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள். விழுப்புரம் மாவட்டத்தில், மாற்று கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க லஞ்சம் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைந்து வருவதாக […]
தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது. தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது. இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் எனும் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்த சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கச்சாஎண்ணெய் அதிக அளவில் வெளியேறி நிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த ஓஎன்ஜிசி குழாய் நேற்று இரவே உடைந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாகதான் வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள […]
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள் உடனான கலந்துரையாடலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்தார். மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது உயர்மின் கோபுரம், எட்டு வழி சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பகல் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி கருப்பு நிற கேரட்டை பயிரிடுகிறார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்ற விவசாயி. இவர் மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை விலைக்கு வாங்கி தனது நிலத்தில் பயிரிட்டுள்ளார். பொதுவாகவே கேரட் என்றாலே ஆரஞ்சு நிறத்தில் தான் காணப்படும். ஆனால் இந்த கேரட் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இந்த கேரட் 90 […]