#Breaking: தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார் !

சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்த நிலையில்,அதனை உறுதிப்படுத்தி  சபாநாயகர் மகிந்த

சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்த நிலையில்,அதனை உறுதிப்படுத்தி  சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில்,தற்காலிக அதிபராகரணில்விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் வரும் 19 ஆம் தேதி பெறப்படும் என்றும்,அதற்கான வாக்கெடுப்பு 20 ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking: தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார் !