இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா களம் போட்டியிடுகிறார். மேலும், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறார். இந்த மூவருக்கும் இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவ்ரகள் […]
இலங்கை : கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களுக்குள் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார். தற்போது, அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான […]
சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்த நிலையில்,அதனை உறுதிப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் வரும் 19 ஆம் தேதி பெறப்படும் என்றும்,அதற்கான வாக்கெடுப்பு 20 ஆம் தேதி […]
இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்துள்ளாராம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில்மக்கள் போராட்ட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் திடீரென ஓர் முக்கிய அரசியல் நகர்வு நடந்துள்ளது. அதாவது, இலங்கையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அவர், ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளாராம். அதாவது, ‘ இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.