டீ-கடையில் அமர்ந்து டீ குடித்த ராகுல் காந்தி!

On his way to Tiruppur, congress fomer leader Rahul Gandhi had tea at a bakery in Avinashi today In between campaigns,

திருப்பூர் செல்லும் வழியில் அவினாசியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி .

தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் ராகுல்காந்தி.இன்று முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.கோவை வந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.முதல்கட்டமாக கோவையில் தனது பரப்புரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

இதனிடையே  திருப்பூர் செல்லும் வழியில் அவினாசியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி .அவருடன் கட்சி நிர்வாகிகளும் இருந்து தேநீர் அருந்தினார்கள்.