ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்..!

Congress MPs have been protesting in parliament demanding the repeal of three agricultural laws.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன் ராகுல்காந்தி தலைமையில் அதிரன்சவுதரி, மணிஷ்திவாரி, திருநாவுக்கரசர், சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்களும், பஞ்சாப் மாநிலத்தை கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மூன்று வேதங்களை திரும்பப் பெறக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி மக்களவை , மாநிலங்களவை இரண்டிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அமளியில் ஈடுபட உள்ளனர்.