பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நவ்ஜோத் சிங் சித்து அனுப்பியுள்ளார்.
அதில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கை கருத்தில் கொண்டு அதன் நலனைக் காக்கும் வகையில் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதைதொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் விலகிய நிலையில், நவ்ஜோத் சிங் சித்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
unknown node