பிரியங்கா காந்தி விளக்குமாறால் அறையை சுத்தம் செய்யும் காட்சி வெளியானது..!

Priyanka Gandhi, who is in custody, is seen cleaning her room.

தடுப்புகாவலில் உள்ள பிரியங்கா காந்தி தனது அறையினை விளக்குமாறால் சுத்தம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது உத்தரபிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையெடுத்து,இன்று காலை உத்திரப்பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டபிரியங்காகாந்திதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,பிரியங்காகாந்திஅடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையினை விளக்குமாறால் சுத்தம் செய்யும் காட்சி தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தடுத்த காவல்துறையினரை கண்டித்து பிரியங்கா காந்தி  உண்ணாவிரதம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

unknown node