இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள்.! கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.!

அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் லக்ஷ்மி மற்றும் கணேஷ் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடியுங்கள் என்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் லக்ஷ்மி மற்றும் கணேஷ் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடியுங்கள் என்று கூறியுள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்திற்கு அருகில் லக்ஷ்மி மற்றும் கணேஷா ஆகிய கடவுள்களின் படங்களும் இடம்பெற்றால் நம் நாடு வளம் பெறும் என்று கூறியுள்ளார்.

நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுத இருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா போன்ற முஸ்லீம் நாடுகளில் ரூபாய் நோட்டுகளில் கடவுள் கணேஷ் படம் இடம் பெற்றிருக்கும் போது இந்தியாவில் அது போன்று ஏன் இடம்பெறக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டி கெஜ்ரிவால் இது போன்று தெரிவித்துள்ளார்.

unknown node
இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள்.! கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.!