பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.
மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தொடர்பாக தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
இன்று மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றும்போது முக்கியமான சில அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த இரண்டாம் அலை சமாளிப்பதற்காக நிறைய அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
unknown node