பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்!

Congress general secretary Randeep has said that Prime Minister Modi should apologize to the people for blocking the Delhi border.

டெல்லி எல்லையை அடைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்த நிலையில், எல்லைக்குள் நுழையும் விவசாயிகளை தடுப்பதற்காக டெல்லியில் சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள் அமைக்கப்பட்டு ருந்தது.

தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதால் டெல்லியில் உள்ள தடுப்புகள் மற்றும் வேலிகளை போலீசார் அகற்ற தொடங்கியுள்ளனர். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும், சாலைகளை அடைப்பதற்கு உரிமை இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. சாலைகளை அடைத்ததற்கு போலீஸ் தான் பொறுப்பு என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தடுப்புகளை அகற்றும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சாலைகளை அடைத்துக் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்க்காக நாட்டு மக்களிடமும், உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும் சாலைகளை அடைத்தது விவசாயிகள் அல்ல, காவல்துறை என்பது இப்போது தான் தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.