டெல்லி எல்லையை அடைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் கூறியுள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்த நிலையில், எல்லைக்குள் நுழையும் விவசாயிகளை தடுப்பதற்காக டெல்லியில் சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள் அமைக்கப்பட்டு ருந்தது. தற்போது […]
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதற்கொண்டு டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி – ஹரியானா இடையிலான சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 32 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இதுதொடர்பாக மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தைகள் […]
டெல்லியில் 5 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிபடை வீரர்களால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனையடுத்து நாசகார செயல்களில் ஈடுபடுவதற்காக நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் டெல்லியில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால், […]
டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெல்லியில் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்பாக்கள் மூடியே […]