#Breaking:அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

Prime Minister Modi is scheduled to hold consultations with all state chief ministers at 4 pm today via video.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் தடுக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜனவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்படி,தற்போதைய கொரோனா நிலவரம்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஜன.13 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலமாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.